என் சபையைக் கட்டுவேன்

என் சபையைக் கட்டுவேன் - என்ற
இயேசு பேசுகின்றார்
உள்ளத்தைக் கேட்கின்றார்
உனக்குள்ளத்தைக் கேட்கின்றார்
வாராயோ? தாராயோ?
உந்தன் இயேசு கேட்கின்றார்

சரணங்கள்

1. காலங்கள் வேகமாய் கடந்து செல்லும்
பருவங்கள் விரைவினில் பறந்து போகும்
வாய்ப்புள்ள போதெ செயல்படவா
ஆண்டவர் திருப்பணி செய்திடவா - என் சபையைக்

2. இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
ஆவியின் வரங்களை நிரம்பப் பெற்றோர்
தரிசனம் பெற்றிடக் காத்திருந்தால்
தெய்வத் திருத்தொண்டு செய்பவர் யார் - என் சபையைக்

3. பெலனில்லை அறிவில்லை வரமுமில்லை
குறைவுள்ளவன் என் தயங்கிடாதே
இயேசுவின் கரங்களில் தந்துவிடு
வல்லநல் ஆயுத மாக்கிடுவார் - என் சபையைக்

4. கொள்கையால் பரிந்திடும் காலமில்லை
உறங்கியே கழித்திடும் நேரமில்லை
ஆஸ்திகள் பெருக்கிடும் சமயமில்லை
ஆத்தும அறுவடை செய்திடவா- என் சபையைக்

Start Downloading Your Apps