இரண்டு நூறு ஆண்டுகள்

1.இரண்டு நூறு ஆண்டுகள்
இடைவிடாநல் ஊழியங்கள்
இன்னும் தொடர்ந்திடப் பாடுங்கள்
இறைவன் கிருபை வேண்டுங்கள்

பாடுங்கள், பாடுங்கள்
அன்றுபோல் இன்றும் என்றும்
அவர் கிருபை பெருகி வர
பாடுங்கள், பாடுங்கள்

2 அந்நியர் பலர் ஊழியராய்
இந்நிலம் வந்து மாதிரியாய்
இலங்கினார் உண்மைக் கிறிஸ்தவராய்
இறைவனாம் ஏசுவின் மாண்பிற்காய் -பாடுங்கள்

3.இன்னல்கள் கூட்டிய நிலைதனிலும்
இன்முகம் காட்டியே இறைபணியே
பின்னடையாமல் செய்தோர் முன்னோர்
பின்னோடியாய் நாம் தொடர்ந்திடுவோம் -பாடுங்கள்

4 இத்திருமண்டலம் இலங்கிடவே
இயன்ற உதவி செய்வோமென்று
உரத்த குரலில் பாடுங்களேன்
பெருத்த மகிழ்வு தேடுங்களேன் - பாடுங்கள்

5 திருமண்டலத்தின் திருப்பணிகள்
திறம்பட இலங்கி முழுமைபெற
தினம் தினம் முழந்தாளிட்டு
திரு அவதாரனை வேண்டிடுங்கள் - பாடுங்கள்

Start Downloading Your Apps