தேவனே ஏசு நாதனே

தேவனே, யேசு நாதனே, இத்‌
தேவ ஆலயம்‌ வந்திடும்‌;
தேவ ஆலயம்‌ வந்தவர்க்‌ கருள்‌
திவ்ய ஆவியை ஈந்திடும்‌.

சரணங்கள்‌

1. பாவிகள்‌ உமக்காலயஞ்‌ செய்யப்‌
பாத்திரர்களோ? அல்லவே;
பாவநாசராம்‌ யேசுவே உம்மால்‌
பாத்திரராய்‌ இதைச்‌ செய்தனர்‌. - தேவனே

2. கூடிவந்‌ தும்மையே பணிந்திடக்‌
குறித்த இச்சிறு ஆலயம்‌
நாடி வந்தவர்‌ யாவருக்குமுன்‌
நல்வசன முளதாகவும்‌. - தேவனே

3. தேவனே, உமக்கான ஆலயம்‌
பாவியின்‌ சிறு நெஞ்சமே;
பாவம்‌ யாவையும்‌ நீக்கியே சிறு
தேவ ஆலய மாக்கிடும்‌. - தேவனே

- அருள்திரு. ச. தாவீது

Start Downloading Your Apps