யேசுவின்‌ ஒதுக்கில்‌ நான்‌ இறக்க

யேசுவின்‌ ஒதுக்கில்‌! நான்‌ இறக்க அருள்புரியும்‌.

நேசபரனே இந்த நீசன்‌ கெஞ்சிக்‌ கேட்கிறேன்‌. - யேசு

சரணங்கள்‌

1. நாள்‌ ஓடும்‌, சாவி சேரும்‌, நாதா, எந்த நேரமோ?
பாழுடல்‌ விட்டு ஜீவன்‌ பறக்கும்‌ வேளையறியேன்‌. - யேசு

2. யேசுவை விட்டென்‌ சாவு என்னைப்‌ பிரித்திடாது;
நீசன்‌ அவரில்‌ நின்றென்‌ நேசரேயென்று சொல்வேன்‌. - யேசு

3. என்‌ ஜீவன்‌ இன்றுபோயும்‌ என்‌ மீட்பரால்‌ நான்‌ பாக்யன்‌;
என்‌ சாவு நாளை வந்தும்‌ யேசுவுக்குள்‌ நான்‌ நிற்பேன்‌. - யேசு

4. நீர்‌ என்னை இங்கே வைக்கும்‌ நேரமட்டும்‌ உமக்கே
சீராக நான்‌ பிழைக்கத்‌, தேவா, எனை நடத்தும்‌. - யேசு

5. சீர்ப்படத்‌ தாமதமேன்‌? ஜீவவழி பிடிப்பேன்‌;
ஈறந்தத்தை நினைப்பேன்‌, என்‌ தீபமே சோடிப்பேன்‌. - யேசு

6. யேசுவின்‌ நீதியால்நான்‌ என்பாவத்தை மூடுவேன்‌;
மாசற்றுச்‌ சுத்தமாவேன்‌ மனதில்‌ விசுவாசித்து. - யேசு

7. ஆண்டவரைங்‌ காயங்கள்‌ அடியேனின்‌ அடைக்கலம்‌;
மாண்டோர்‌ அவர்‌, நான்‌ மாளேன்‌, மரணம்‌ எனதுபாக்யம்‌-யேசு

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps