இயேசு நாமம் ஒன்றை

இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்
பூலோகத்தாரே

சரணங்கள்

1. இயேசு நாமம் ஒன்றை நம்பும்
ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்
பேசும் வேறே நாமமெல்லாம்
பேயின் வம்பும் தும்புமாகும்- இயேசு

2. மூவரிலொருவருமாய்
முத்தொழில் புரிவோருமாய்
ஆவியாய் அனாதியாய்
ரூப ரூப வஸ்துவான - இயேசு

3. ஐயன் இயேசையா உரைத்து
ஆரணத் தெழுதி வைத்து
வையகம் புரக்கும் நாயன்
தையல் தரும் தூயசேயன்- இயேசு

4. பார்த்திபன் தாவீது குல
கோத்திர கன்னிமரிபால்
நேத்திரம் போல உதித்துத்
தாத்திரி ரட்சகனாக - இயேசு

5. பூதலத் தஞ்ஞான இருள்
போக்கவே மெஞ்ஞான பெரும்
ஜோதியாய் விளங்கி நிற்கும்
நீதியின் சூரியன் ஆன - இயேசு

6. பாவிகளீடேற மோட்ச
பாக்கியம் பெறுவதற்காய்
ஜீவன் விட்டுயிர்த்தெழுந்து
சேணுலகுக் கேறிச்சென்று - இயேசு

7. விண்டலத்தவர்கள் சூழ
கண்டலகை பதறிவிழ
மண்டலத்தைத் தீர்வை செய்ய
கொண்டல் மிசை வரும் ராஜன் - இயேசு

Start Downloading Your Apps