யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

சரணங்கள்

1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே.- யூத

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே - யூத

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன - யூத

4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே- யூத

5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்- யூத

6. மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை- யூத

7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தைச் சிரமணிவோம் - யூத

Start Downloading Your Apps