தரி தாழ்மையே தெரிந்து

தரி-தாழ்மையே தெரிந்து,-வெறு
தாட்டிகமதை உரிந்து.

சரணங்கள்‌

1. திரித்துவத்‌ தொருவராம்‌ கிறிஸ்தேசு
செயலதை நீ குறி மனமே;-அவர்‌
தரித்திர னிகராய்‌ இகத்தில்‌ உற்பவமாய்த்‌
தாழ்ந்திருந்தார்‌ அனுதினமே - தரி

2. மனத்தரித்திரர்‌ தாம்‌ பாக்கியர்‌ எனவே
வாகுடன்‌ அவர்‌ உரைத்தாரே;-நெஞ்சே
உனக்குள்‌ இத்தகையான நற்குணமே
உண்டோ என்‌ றாய்ந்து நீ பாரே. - தரி

3. மேட்டிமை யுடையோர்‌ மீது தற்பரனார்‌
வெறுப்படைந்‌ தகற்றுவார்‌ உடனே;-நல்ல
தாட்டிகமதிலாத்‌ தாழ்ந்த சிந்தையினோர்‌
தமக்கருள்‌ புரிகுவர்‌ திடனே. - தரி

4. ஆதியில்‌ தூதர்களில்‌ சிலர்‌ கெர்வம்‌
அடைந்து நல்‌ வாசமற்றாரே;-உடன்‌
தீதறு பேய்களால்‌ எரிநகரில்‌
சேர்ந்ததி சாபமுற்றாரே. - தரி

- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps