தொழுகிறோம் எங்கள் பிதாவே

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

அனுபல்லவி

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

சரணங்கள்

1. வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம்- தொழு

2. தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம் சரணம்- தொழு

3. கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம்- தொழு

4. கரங்கள் பொன் வளையல்கள் போல
நிறங்களும் தந்தத்தைப் போல
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம்- தொழு

5. சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதானம் எம் மூலைக்கல்லே
ஏராளமாய் சரணம் சரணம் - தொழு

6. அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம்- தொழு

7. பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் தொழு

Start Downloading Your Apps