அந்த நாள் பாக்கிய நாள்

அந்த நாள்‌ பாக்கிய நாள்‌-நான்‌ மீட்கப்பட்ட
அந்த நாள்‌ பாக்கிய நாள்‌.

அனுபல்லவி

அந்த நாள்‌ ஆனந்த நாள்‌, அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள்‌ நீக்கின நாள்‌ - அந்த

சரணங்கள்‌

1. அன்றே எனக்குப்‌ பேதித்தார்‌,-அவர்‌ வழியில்‌
அநுதினம்‌ செல்லக்‌ கற்பித்தார்‌;
என்றும்‌ அவர்மேல்‌ சார்ந்தே இன்ப ஜீவியம்‌ செய்ய
ஏவினார்‌ என்‌ இரட்சகர்‌, எங்கும்‌ ப்ரஸ்தாபிப்பேனேன. - அந்த

2. என்றனை அன்றே இழுத்தார்‌-தமதன்பினால்‌
இசைவாய்த்‌ தம்முடன்‌ இணைத்தார்‌;
சொந்தம்‌ நான்‌ அவருக்குச்‌ சொந்தம்‌ அவர்‌ எனக்கு,
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம்‌ பெற்றேன்‌. - அந்த

3. ஆறுதல்களால்‌ நிறைந்தேன்‌,-அளவில்லாத
ஆசிகளினால்‌ மகிழ்ந்தேன்‌;
தாறுமாறான உள்ளம்‌ மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில்‌ மகிமையாய்த்‌ தங்கப்‌ பெற்றேன்‌. - அந்த

4. அந்நாளில்‌ வாக்குப்‌ பண்ணினேன்‌,-உறுதியாக
எந்நாளும்‌ நான்‌ புதுப்பிப்பேன்‌;
சொன்ன இவ்வாக்கை நிதம்‌, சுத்தமாய்‌ நிறைவேற்ற
உன்னத பலம்‌ தாராய்‌, என்னையாட்கொண்ட தேவா. - அந்த

- அருள்திரு. வே. சந்தியாகு

Start Downloading Your Apps