நம்முடைய தெய்வம் இயேசு

நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் - இந்த
நானிலத்தில் வேறு தெய்வமில்லை- நம்

1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
பாக்கியமுள்ளது எனப்படுமாம் - நம்

2. பாவமறியாத பரிசுத்தராம் இயேசு
பாவிகளை இரட்சிக்க வந்தவராம் - நம்

3. பற்பல கிருபைகள் பகருகின்றார் - நாம்
கற்புடன் அவர் பணி செய்திடவே- நம்

4. கற்சிலை பேசுமோ வாய்திறந்து - நம்
கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் - நம்

5. மறப்பாளோ தாய் தன் பாலகனை - நான்
மறப்பதில்லை என்றும் அன்பு தெய்வம் - நம்

6. ஏறெடுக்கும் நம் தேவைகட்கு - அவர்
மாறாமல் பதில் தரும் மகிபனவர் - நம்

7. சகலமும் படைத்த சர்வாதிகாரி - இயேசு
சகலமும் ஜெயித்திட்ட சர்தாரி - நம்

Start Downloading Your Apps