பாவியாம்‌ எனை மேவிப்பார்

பாவியாம்‌ எனை மேலிப்பார்‌, ஐயா-யேசுநாதா, ஸ்வாமி;
பட்சமாக என்‌ பாவந்‌ தீர்‌ ஐயா.

2. தேவத்ரோகி பாவி நான்‌ அன்றோ,-யேசுநாதா, ஸ்வாமி,
சீர்பதம்‌ துணையன்றி வேறுண்டோ?

3. தீவினையுறு சாவு மேவிற்றே,-யேசுநாதா, ஸ்வாமி;
சித்தம்‌ வைத்திரட்சித்தாள்‌ ஏழையே.

4. சஞ்சல மிகுந்தஞ்சல்‌ ஆயினேன்‌,-யேசுநாதா, ஸ்வாமி;
தங்கும்‌ உனை விட்டெங்கே ஏகுவேன்‌?

5. மனது, வாக்கு, வினைகளில்‌ எல்லாம்‌,-யேசுநாதா, ஸ்வாமி;
மாசுளோனாய்க்‌ கூசினேன்‌, ஐயா.

6. என்தன்‌ நீதி ஓர்‌ கந்தை அல்லவோ,-யேசுநாதா, ஸ்வாமி;
என்செய்வேனே? மறு தஞ்சம்‌ இல்லையே.

7. அலகையோடெனை உலகம்‌ ஏய்க்குமே,-யேசுநாதா, ஸ்வாமி;
ஆதரவில்லை, பாதுகா, ஐயா.

8. மன்னுயிர்க்‌ கெனத்‌ தன்னுயிர்‌ விட்ட,-யேசுநாதா, ஸ்வாமி;
வந்தெனது நிர்ப்பந்தம்‌ பார்‌, ஐயா.

- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps