அல்லேலூயா தேவனுக்குத் துதி

1. அல்லேலூயா தேவனுக்குத் துதி மகிமையே
அதிசயமாய் அற்புதமாய் வழிநடத்தினார்
இரண்டு நூறு ஆண்டுகள் விந்தையாகவே
இறைவன் இயேசு அருளினால் வளர்ந்து பெருகுவோம்

உள்ளத்தில் நன்றியால் நிரம்பிப் பாடுவோம்
வெள்ளம் போல் பெருகிடும் இன்ப கீதத்தால்
எள்ளளவும் குன்றிடா தேவ கிருபையால்
அகமகிழ்ந்து அல்லேலூயா துதி முழக்குவோம்

2. கொல்கதாவின் தியாக அன்பு உள்ளம் கவர்ந்திட
தொல்லை ஏற்று அன்பர் பலர் தொண்டு புரிந்தனர்
அல்லும் பகலு இயேசு என்று பேசித் திரிந்தனர்
கல் மனங்கள் கரைந்து உருக உதிரம் சிந்தினர்;

3. தேவாலயக் கற்கள் பேசும் தியாக சரிதையும்
நிறுவனங்கள் அனைத்தும் கூறும் கண்ணீர்க் கதைகளும்
மேன்மைசெல்வம் யாவும் துறந்த அன்புத் தொண்டர்கள்
ஆன்மாக்களின் வேட்கையுடன் மெழுகாய் உருகினார்.

4. தியாகத்தால் எழுந்த சபைகள் வளர்ந்து பெருகவும்
கண்ணீரால் வளர்ந்த சேவை சிறந்து விளங்கவும்
தன்னலம் இல் பொருள் என்றென்றும் ஆகிட
தூய்மைதொண்டு தொடர நாமும் துதித்து மகிழுவோம்

5. உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் தொண்டின் மகிமையும்
நிமிர்ந்து நோக்கும் நமது சபைகள் பெருமைசேர்த்திடும்
பன்மடங்காய் கிறிஸ்தவர்கள் பெருகி வளர்ந்திட
ஒன்றாய் இணைந்து இயேசுவுக்காய் என்றும் உழைப்போம்

Start Downloading Your Apps