தாகம்‌ மிகுந்தவரே அமர்ந்த

தாகம்‌ மிகுந்தவரே, அமர்ந்த
தண்ணீரண்டை வாரும்‌. -ஓ!

1. ஏகன்‌ நானுங்களையே அழைக்கும்‌ என்தன்‌
இன்பவாக்குத்தத்தமே,-நம்பி
வேகமாக ஓடி வாருமெனதிடம்‌,
வேண்டியதைத்‌ தருவேன்‌. - ஓ!

2. காசுபணமது, அற்றுலகந்தன்னில்‌
கஷ்டப்படுவோரே,-விசு
வாசமாய்‌ என்னிடம்‌ வந்து விலையின்றி
வாங்கியே சாப்பிடுமே. - ஓ!

3. பாரச்சுமையோடு பாரில்‌ வருத்தங்கள்‌
பட்டு உழல்வோரே,-வாரும்‌,
நேரே, உமக்கிளைப்பாறுதலாவியை
நேசமாய்த்‌ தந்திடுவேன்‌. - ஓ!

4. அப்பமல்லாத பொருளையும்‌ திருப்தி
ஆகாத வஸ்துவையும்‌,-நம்பித்‌
தப்பிதமாய்ப்‌ பிரயாசத்தையும்‌ பணம்‌
தன்னையுமேன்‌ கெடுப்பீர்‌? - ஓ!

5. கர்த்தரைக்‌ கண்டடையத்தக்க காலத்தில்‌
கண்டிடுமே உடனே;-உந்தன்‌
அத்தன்‌ சமீபமாக இருக்கும்‌ போதே
ஆவலாய்க்‌ கூப்பிடுமே. - ஓ!

- அருள்திரு. வே. மாசிலாமணி

Start Downloading Your Apps