கர்த்தருக்குக்‌ காணிக்கையிதோ

கர்த்தருக்குக்‌ காணிக்கையிதோ! தம்மையே தந்த
கர்த்தருக்குக்‌ காணிக்கை! இதோ!

கர்த்தருக்குக்‌ காணிக்கையாய்ப்‌
பத்திலொன்று நான்‌ கொடுப்பேன்‌,
சத்தியக்‌ கிறிஸ்து நாதர்‌
சபையை வர்த்திக்கவேணும்‌. - கர்த்தருக்கு

சரணங்கள்‌

1. அநியாயம்‌ நீங்க வேணும்‌,-உலகிலே மெய்‌
அறிவு வளர வேணும்‌,
தனியேக மெய்த்தேவனை-நற்தேசத்தில்‌
சகலரும்‌ போற்ற வேணும்‌,

கனிவாய்ப்‌ போதகர்‌ வேதம்‌
கற்றறிந்து சொல்லவேணும்‌,
கணக்காய்‌ இதன்‌ செலவு
கட்டி வரவேணும்‌, அய்யா! - கர்த்தருக்கு

2. ஆபிரகாம்‌ பத்திலொன்றையே-மெல்கிசே தேக்குக்‌-கு
அனைத்திலும்‌ தந்ததையே!
மா பிரியமாக வாசித்தேன்‌,-இஸ்ரயேல்‌ பெத்தேல்‌
வள்ளற்குச்‌ செய்பொருத்தனையே,

ஆண்டவர்‌ பரன்‌ அவர்கட்‌
கனைத்தும்‌ ஆசீர்வதித்துத்‌
தாபரம்த மதடி கீழ்த்‌
தத்தளித்த தெல்லாங்‌ கேட்டேன்‌. - கர்த்தருக்கு

3. கொஞ்சங்‌ கொஞ்சமாகச்‌ சேர்த்தேன்‌-இதோ! இத்தனை
கூடினதைக்‌ கொண்டிதோ வந்தேன்‌,
நஞ்சைவிளைவினி லோர்பாகம்‌-சேர்த்து வைத்தேனான்‌,
நாலாவகை வரத்திற்‌ கொஞ்சம்‌,

புஞ்சை பல போகத்திலும்‌
போட்டு வைத்தே னான்குறுணி
புத்தகக்‌ கணக்கில்‌ கண்ட
தித்தனைத்‌ தொகையுமாச்சு. - கர்த்தருக்கு

- மு.ப. அருளப்பன்‌

Start Downloading Your Apps