விருந்தைச் சேருமேன்

1. விருந்தைச் சேருமேன்,
அழைக்கிறார்;
ஆகாரம் பாருமேன்,
போஷிப்பிப்பார்;
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா, பாவி, வா.

2. ஊற்றண்டை சேரவும்,
ஜீவனுண்டாம்;
பாடும் விசாரமும்
நீங்கும் எல்லாம்;
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று;
ஜீவாற்றின் அண்டைக்கு
வா, பாவி, வா.

3. மீட்பரின் பாதமும்
சேராவிடில்,
தோல்வியே நேரிடும்
போராட்டத்தில்;
இயேசுவே வல்லவர்,
இயேசுவே நல்லவர்,
இயேசுவே ஆண்டவர்;
வா, பாவி, வா.

4. மோட்சத்தின் பாதையில்
முன் செல்லுவாய்;
சிற்றின்ப வாழ்வினில்
ஏன் உழல்வாய்?
வாடாத கிரீடமும்
ஆனந்தக் களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா, பாவி, வா.

5. சேருவேன் இயேசுவே
ஏற்றுக் கொள்வீர்;
பாவமும் அறவே
சுத்தம் செய்வீர்;
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்.

Start Downloading Your Apps