அஞ்சாதே யேசு ரட்சகர்

அஞ்சாதே யேசு ரட்சகர்
ஆத்மத்துயர் நீக்க வல்லவர்.

அனுபல்லவி
வஞ்சமே மிஞ்சுமா பஞ்சபாதகன் நானென்று. - அஞ்

சரணங்கள்

1. திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில்
திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்-கு
அருள் பெற்றான், என் வேதஞ் சொல்வதை
ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல்.

2. வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள்
வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின்,
துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே,
தூதர் சங்கமும் களிப்பதாலே.

3. மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை
வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின்,
வாய்ப்புடன் மனம் மகிழும் போலே,
மானுவேலுனைத் தழுவலாலே.

4. தொண்ணூற் றொன்பது நீதியரிலுந்
துயரடை பாவி யொருவன் மீதினில்
எண்ணருந் தூதர் மகிழ்வதாலே
இரட்சிப் புனக்குப் பலித்ததாலே.

5. மரணத்தின் கூரை ஒடித்த வல்லவன்
வருந்தி அழைத்த விருந்துக்கு வரத்
தருணம் ஈதெனத் தாசர்கூடிச்,
சற்றும் மொழியை ஏற்று நீவர.

Start Downloading Your Apps