இந்த மங்களம்‌ செழிக்கவே

இந்த மங்களம்‌ செழிக்கவே-கிருபை செயும்‌,
எங்கள்‌ திரித்துவ தேவனே!


சுந்தரக்‌ கானாவின்‌ மணப்‌ பந்தலில்‌ சென்‌ றம்பணத்தைக்‌
கந்த” ரசமாகச்‌ செய்த விந்தைபோல்‌, இங்கேயும்‌ வந்து. - இந்த


1. ஆதி தொடுத்‌ தன்பை எடுத்தாய்‌;-மானிடர்‌ தமை
ஆணும்‌ பெண்ணுமாகப்‌ படைத்தாய்‌;
நீதி' வரம்‌ நாலுங்‌ கொடுத்தாய்‌;-பெற்றுப்‌ பெறுகி
நிற்க உலகத்தில்‌ விடுத்தாய்‌;
மாதவர்‌ பணியும்‌ வேத போதனே, அந்தப்படி உன்‌
ஆதரவைக்கொண்டு சுதன்‌ நீதியை நம்பிப்‌ புரிந்த - இந்த

2, தக்க ஆபிராமும்‌ விண்டனன்‌-அதனை மன
துக்குள்‌ எலியேசர்‌ கொண்டனன்‌;
முக்கிய ஆரன்‌ நிலத்தண்டினன்‌;-நினைத்தபடி
சக்கிமதாகக்‌' கண்டனன்‌
பக்குவம்‌ உரைத்திடாரே பக்காளும்‌ ஈசாக்குவுக்குத்‌
தக்க மண வாளியாகத்‌ தந்து தயை செய்தாற்போல. - இந்த

3. சத்திய வேதத்தின்‌ வாசனே,-அருளு பரி
சுத்த சுவிசேட நேசனே,
பக்தர்கள்‌ பவ வி மோசனே,-பழுதணுவும்‌
அற்ற கிறிஸ்‌ தேசு ராசனே,
வெற்றியால்‌ யாக்கோபுவுக்கு முற்றிலும்‌ அளித்த பேறாய்ப்‌
புத்திர சம்பத்துண்டாக்கி நித்ய சுப சோபனமாய்‌. - இந்த

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps