என் ஆண்டவா என் பாகமே

1. என் ஆண்டவா, என் பாகமே,
நீர் நித்த மாட்சிமை;
விஸ்தார வையகத்திலே
நீரே என் வாஞ்சனை.

2. இவ் வானமும் இப்பூமியும்
மிகுந்த அற்பமே;
இவைகளில் ஏதாகிலும்
உமக்கொப்பாகாதே.

3. பூலோக ஆஸ்திகள் எல்லாம்
எனக்கிருந்துமே
என் நெஞ்சில், கர்த்தரே, நீர்தாம்
தங்கா விட்டால் வீணே.

4. சிநேகம், சுகம், செல்வமும்
உம் ஈவாய்ப் பெறுவேன்;
நன்மைக்கு ஊற்றாம் உம்மையும்
நான் நாடித் தேடுவேன்.

5. நீர் நிறைவான ஆஸ்தியே,
நீரே சமஸ்தமும்;
என் ஏழை நெஞ்சை, கர்த்தரே,
உம்மாலே நிரப்பும்.

Start Downloading Your Apps