துதிப்பேன் துதிப்பேன் தேவனை

துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியில் வசிப்போனை

அனுபல்லவி

அதிசயமானவனை அதிலுமேலானவனை

1. இரண்டு மூன்று பேர்கள் நாமத்தில்
கூடினால் வருவேன் என்றீரே
என்றுரைத்த வாக்கை நிறைவேற்ற
எங்களில் வந்தவா ஆனந்தம் - துதிப்பேன்

2. கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட
மாறாத இயேசுக்கானந்தம்- துதிப்பேன்

3. இன்றைத்தினம் வரைக் காத்தீரே
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே
நின் கிருபையால் கடந்து வந்தோம்
அன்பே ஆரூயிரே ஆனந்தம்- துதிப்பேன்

4. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர் கானந்தமே
அல்லேலூயா உமக்கல்லேலூயா
எல்லா நாளும் உமக்கல்லேலூயா- துதிப்பேன்

Start Downloading Your Apps