ஜீவ வசனங்‌ கூறுவோம்

ஜீவ வசனங்‌ கூறுவோம்‌,-சகோதரரே;
சேர்ந்தே எக்காளம்‌ ஊதுவோம்‌.

பாவிகள்‌ மேலுருகிப்‌ பாடுபட்டு மரித்த
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. - ஜீவ

சரணங்கள்‌

1. பாதகப்‌ பேயின்‌ வலையில்‌,-ஐயோ! திரள்பேர்‌
பட்டு மடியும்‌ வேளையில்‌;
பேதமை யோடு பிடிவாத மருள்‌ மிகுந்து
வேதனை தானடையப்‌ போவோர்‌ கதி பெறவே. - ஜீவ

2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசு
கர்த்தன்‌ சேவையில்‌ அமர்ந்தே;
நாடு, நகர்‌, கிராமந்‌ தேடி நாம்‌ பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள்‌ எல்லாருங்‌ கண்டடைய. - ஜீவ

3. பூலோகம்‌ எங்கும்‌ நமையே,-கிறிஸ்து நமை
போகச்‌ சொல்லி விதித்தாரே;
காலமெல்லாம்‌ உம்மோடு கூடயிருப்பேன்‌ என்ற
கர்த்தன்‌ வாக்கை நினைத்து எத்தேசமுந்‌ திரிந்து. - ஜீவ

4. விண்ணின்‌ மகிமை துறந்தார்‌,-கிறிஸ்து நமை
மீட்கக்‌ குருசில்‌ இறந்தார்‌;
மண்ணின்‌ புகழ்‌, பெருமை எல்லாம்‌ தூசுகுப்பை என்‌
றெண்ணிச்‌ சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு. - ஜீவ

- மா. வேதமாணிக்கம்‌

Start Downloading Your Apps