வாரீரோ? வினை தீரீரோ? எனைக்

வாரீரோ? வினை தீரீரோ? எனைக்‌
காரீரோ? ஜீவன்‌ தாரீரோ, யேசு

வாரேனென்றீர்‌, வரந்‌ தாரேனென்றீர்‌, சுவாமீ,
பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. - வாரீரோ

சரணங்கள்‌

1. தேனே, மரிமகனே, தேடி மறுகுங்‌ கோனே,
சேனைகளின்‌ சீமோனே, சிந்தை கலங்கி நானே
கானகமே மேவும்‌ மானது போலானேன்‌;
வானகம்‌ போன தேவா, ஏனோ வரத்‌ தாமதம்‌? - வாரீரோ

2. அட்ட திக்கெங்கு மென்னைத்‌ துட்டப்‌ பாசாசுக்‌ கூட்டம்‌
இட்டப்‌ படுத்தவல்லோ கிட்ட வளையது, பார்‌
அடுத்தாலோ, அம்பைத்‌ தொடுத்தாலோ என்ன!
அடுபடையாக நின்று தடு படை செய்வீர்‌, யேசு, - வாரீரோ

3. காணாத ஆட்டைத்‌ தேடிக்‌ காடெங்கும்‌ சென்ற கோன்‌ நீர்‌
கண்டு பிடித்த ஆட்டைக்‌ கொண்டு தொழுவஞ்‌ சேர்க்கக்‌
கருத்துடனே மிக உரித்துடனே இரு
கரத்திலேந்தி வலப்‌ புறத்தில்‌ வைப்பீர்‌ திண்ணம்‌. - வாரீரோ

4. வீடு எனக்குச்‌ செய்ய மேலோகம்‌ போன தேவா,
கூட இருத்தி வைக்கக்‌ கூப்பிட வாறேனென்றீர்‌;
கொண்டு வருவீர்‌ முடி, நின்று வருவீர்‌ நொடி;
கண்டு மகிழ்வேன்‌, கூடி நின்று புகழ்வேன்‌ கெடி. - வாரீரோ

- மு. தேவசகாயம்‌

Start Downloading Your Apps