திரும்பிப்‌ பாராதே சோதோமைத்‌

திரும்பிப்‌ பாராதே, -சோதோமைத்‌
திரும்பிப்‌ பாராதே.

விரும்பிப்‌ பார்த்து, லோத்தின்‌ பெண்டு
வெறுமுப்புத்‌ தூண்‌ ஆனதைக்‌ கண்டு. - திரு

சரணங்கள்‌

1. சந்தைக்‌ கூட்டும்‌ பொம்மலாட்டு,-மாதர்‌
சந்தடி செய்யும்‌ சீராட்டு,
விந்தையான போரோட்டு,-மந்தை
வேடிக்கை என்று விட்டோட்டு. - திரு

2. செல்வத்திலே மெத்தச்‌ செருக்கு;-நீ
செய்வதெல்லாம்‌ முழுத்‌-திருக்கு,
பல்‌ வழி நீரோட்டப்‌ பெருக்கு;-ஏன்‌
பண்ணுகிறாய்‌ இந்த முறுக்கு? - திரு

3. அங்கும்‌ இங்கும்‌ சுற்றித்‌ தயங்கிறாய்‌;-உல
காசையினால்‌ மெத்த தியங்கிறாய்‌;
சங்கடத்துள்பட்டு மயங்கிறாய்‌,-வீண்‌
சண்டாளரோடு ஏன்‌ முயங்கிறாய்‌'? - திரு

4. ஆண்டவர்‌ யேசு சகாயமே,-உனக்‌
கடைக்கலம்‌ ஐந்து காயம்‌;
வேண்டிக்‌ கொள்வது நேயம்‌;-கை
விடாதே இந்த உபாயம்‌. - திரு

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌ |

Start Downloading Your Apps