கல்வாரி மலையோரம் வாரும்

கல்வாரி மலையோரம் வாரும் பாவம் தீரும்

அனுபல்லவி

செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்கினாரே - ஜோதி

சரணங்கள்

1.லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு
நொம்பலப்பட வைக்க ஐயன் மேலுருண்டு
தாகத்தினால் வாடிக்கருகியே சுருண்டு
சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு
சாகின்றாரே நமது நாதா ஜீவ நாதா - ஜோதி- கல்

2.பொன் முடி மன்னனுக்கு முண்முடியாச்சே
உபகாரம் பரிகாரம் சிதையவுமாச்சே
விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சே
மேனியெல்லாம் வீங்கி விதனிக்கலாச்சே
மேசையன் அப்பன் கோபம் மேலே இறங்கலாச்சே - ஜோதி- கல்

3.மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்குவது மேனோ
மதுரிக்கும் திருநாவு வறண்டது மேனோ
தளர்ந்திடாத கரங்கள் துவண்டது மேனோ
ஜலத்தில் நடந்த பாதம் சவண்டது மேனோ
சண்டாளர் நம்மால்தானே நம்மால்தானே - ஜோதி- கல்

4.ரட்சகனை மறந்தால் ரட்சண்யமில்லை
நாமக் கிறிஸ்தவர்க்கு இரு பங்கு தொல்லை
பட்சபாதம் ஒன்றும் பரதீசில் இல்லை
பரதீசில் பங்கில்லோருக்குப் பாடென்றும் தொல்லை
பந்தயத்திலே முந்தப்பாரும் முந்தப்பாரும் - ஜோதி - கல்

Start Downloading Your Apps