இயேசு நேசிக்கிறார்‌ இயேசு

இயேசு நேசிக்கிறார்‌,-இயேசு நேசிக்கிறார்‌;
இயேசு என்னையும்‌ நேசிக்க யான்‌ செய்த
தென்ன மா தவமோ!

1. நீசனாமெனைத்தான்‌ இயேசு நேசிக்கிறார்‌,
மாசில்லாத பரன்‌ சுதன்றன்‌ முழு
மனதால்‌ நேசிக்கிறார்‌. - இயேசு

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்‌
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல்‌' ஆச்சரியம்‌. - இயேசு

3. நாதனை மறந்து நாட்கழித்‌ துலைந்தும்‌,
நீதன்‌, இயேசெனை நேசிக்கிறாரெனல்‌
நித்தம்‌ ஆச்சரியம்‌. - இயேசு

4. ஆசை இயேசுவென்னை அன்பாய்‌ நேசிக்கிறார்‌;
அதை நினைந்தவர்‌ அன்பின்‌ கரத்துளே
ஆவலாய்ப்‌ பறப்பேன்‌ - இயேசு

5. ராசன்‌ இயேசுவின்‌ மேல்‌ இன்ப கீதஞ்‌ சொலில்‌,
ஈசன்‌ யேசெனைத்‌ தானேசித்தாரென்ற
இணையில்‌” கீதஞ்‌ சொல்வேன்‌. - இயேசு

- பிரெக்கன்‌ ரிஜ்

Start Downloading Your Apps