பாதைக்கு தீபமாமே பபபல

பாதைக்கு தீபமாமே
பரிசுத்த ஆகமம்‌-மா நல்ல

சரணங்கள்‌

1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,
பேதைக்குத்‌ திரவியமே, பரிசுத்த ஆகமம்‌. - மா நல்ல

2. தேனின்‌ மதுரமே, திவ்ய அமுதமே
வான பிதாவின்‌ வாக்கே பரிசுத்த ஆகமம்‌. - மா நல்ல

3. நீதியி னாதாரமே, நெறியுள்ளோர்‌ செல்வமே,
ஜாதிகள்‌ மேன்மையாமே பரிசுத்த ஆகமம்‌. - மா நல்ல

4. ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.'
ஈனர்க்கும்‌ ஆதரவே பரிசுத்த ஆகமம்‌. - மா நல்ல

5. உலகோர்க்‌ குயிர்துணை, உண்டோ அதற்கிணை?
அலகையை” வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம்‌.- மா நல்ல

6. எல்லையில்லா விஸ்தாரம்‌, எவர்க்கும்‌ பர மாகரம்‌,
வல்ல பரனின்‌ வேதம்‌ ஆகமம்‌. - மா நல்ல

- யாழ்பாணம்‌ அருளானந்தம்‌

Start Downloading Your Apps