உதவி செய்தருளே! ஒருவர்க்

உதவி செய்தருளே!-ஒருவர்க்கொருவர்‌ யாம்‌
உதவி செய்திடவே.

உதவி செய்தருள்‌ மோட்ச
உசிதக்‌ கோனே! நீ பூவில்‌
பதவி தந்திட வந்த போதினில்‌
பலருக்குதவின பான்மை போலவே. - உதவி

1. ஒருவரொருவர்க்காய்‌-சிலுவை தூக்க
ஒத்தாசை தருவாய்‌!
தருண நேச சகாயம்‌ சகலர்க்கும்‌ புரிய
சகோதரன்‌ படும்‌ கஷ்டங்‌ கவலையில்‌

சன்மனத்தொடு பங்கு பெற்றிட. - உதவி
2. உன்னன்பு தொடவே-எம்முள்ளங்கள்‌
ஒன்றாய்ப்‌ பொருந்தவே,
எந்நாளும்‌ பிறன்பால்‌ யாம்‌ ஏகியே கிட்டிட,
எந்தையே! உனையருகி நெருங்கிட,
உன்தயை செயல்‌ தந்து மேற்பட. - உதவி

3. பிரியாமல்‌ உனையே-பற்ற எமக்குப்‌
பெலன்‌ தா! நீ துணையே!
நிறைவாய்‌ உனிலிருந்த பரிவான அன்பின்‌ சிந்தை
நினது சீடர்கள்‌ பெறவே கிருபைசெய்‌!
நிதமு மதிலே மிக வுய்திடவே - உதவி

4. மாசற்ற பளிங்காய்‌-ஒளிருமுன்‌
மாணன்பு மிகவாய்‌,
ஆசற்ற குணமனி கோர்க்கும்‌ பொற்‌ சரடதே!
அழிவிலாததை எமக்குள்‌ அணிந்திட,
ஆர்ந்துன்‌ சிந்தையை நேர்ந்து செய்திட. - உதவி

- அருள்திரு. வே. மாசிலாமணி

Start Downloading Your Apps