ஆசையாகினேன்‌ கோவே

ஆசையாகினேன்‌, கோவே-உனக்‌
கனந்த ஸ்தோத்திரம்‌, தேவே!

யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா,
ஒரே தட்சகா! - ஆசை

சரணங்கள்‌

1. வேதா, ஞானப்‌ பர்த்தா,
-என்‌-தாதா, நீயே கர்த்தா;
மா தாரகம்‌” நீ என்றே,
பரமானந்தா, சச்சிதானந்தா. - ஆசை

2. கானான்‌ நாட்டுக்‌ கரசே,
உயர்‌-வான்‌ நாட்டார்‌ தொழும்‌ சிரசே,
பண நானாட்ட முடன்‌ தேடித்‌,
தேடி நாடிப்‌, பதம்‌ பாடி. - ஆசை

3. வீணாய்‌ காலம்‌ கழித்தேன்‌;-சற்றும்‌
தோணாமல்‌ நின்று விழித்தேன்‌
காணா தாட்டைத்‌ தேடிச்‌
சுமந்த கருத்தே, எனைத்‌ திருத்தே.- ஆசை

4. வந்தனம்‌, வந்தனம்‌, யோவா!-
நீ-சந்ததம்‌ சந்ததம்‌ கா, வா,
விந்தையாய்‌ உனைப்‌ பணிந்தேன்‌,
சத்ய வேதா, யேசு நாதா! - ஆசை

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps