வீராதி வீரர்‌ யேசு சேனை

வீராதி வீரர்‌ யேசு சேனை நாங்கள்‌,
சேனை நாங்கள்‌; யேசுவின்‌ சேனை நாங்கள்‌.

2. திரு வசனத்தை எங்கும்‌ திரிந்து சொல்வோம்‌,
திரிந்து சொல்வோம்‌; அதை அறிந்து சொல்வோம்‌.

3. அறிவீன மென்னும்‌ காட்டை அதமாக்குவோம்‌',
அதமாக்குவோம்‌; ஞானமதால்‌ தாக்குவோம்‌.

4. சிலுவைக்‌ கொடியைச்‌ சேரத்‌ தேடிப்‌ பிடிப்போம்‌,
தேடிப்‌ பிடிப்போம்‌, அன்பு கூர்ந்து பிடிப்போம்‌.

5. ரட்சண்ய சீராவுடன்‌ நீதிக்‌ கவசம்‌,
நீதிக்‌ கவசம்‌; கையாடுவோம்‌ வாசம்‌.

6. விசுவாசக்‌ கேடகத்தை மேலுயர்த்துவோம்‌,
மேலுயர்த்துவோம்‌; அதை மேலுயர்த்துவோம்‌.

7. பாவச்‌ சோதனைத்‌ தடைகள்‌ பாசம்‌ நீக்குவோம்‌,
பாசம்‌ நீக்குவோம்‌; ஆசாபாசம்‌ போக்குவோம்‌.

- அருள்திரு. ச. சீமோன்‌

Start Downloading Your Apps