பின் செல்வேன் என் மீட்பரே

பின் செல்வேன் என் மீட்பரே: - நானும்மைப்
பின் செல்வேன் என் மீட்பரே

நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர
நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில்லாதால்

1.என் சிலுவை எடுத்தேன், - எல்லாம் விட்டு
என்றும் நின்னையே அடுத்தேன்
நின்திருப் பாதத் தடங்களை நோக்கி நான்
நித்தமும் வாழ்வேனுன் சித்தம் என்றும் செய்து -பின்

2.சிங்கம் போல கெர்ச்சித்தே - என்தன் நேரே
சீறி மிக வெதிர்த்தே
கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
கடியின் மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்றுப் - பின்

3.நெருக்கம் செய்தால் மனுஷர் - அதென்னையுன்
நெஞ்சண்டை யோட்டுவதாம்
யாரிடத்தில் பல சோதனைகள் பதைத்தாலும்
பார்த்திபனே; உன்னை ஒருபோதுமேவிடேன் - பின்

4.காசினியோர்கள் என்னைப் பகைத்தாலும்
காதல னேசு உன்னைப்
பாசமமதாகவே பணிந்து தொழுவேனே;
பாக்கிய நகரில் பின் உன்னோடு வாழ்வேனே - பின்

Start Downloading Your Apps