மண வாழ்வு புவி

மண வாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

1. துணை பிரியாது, தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள்பெறவேது, - நல்ல - மண

2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா,
தெய்வீக மாமண வலங்காரா
தேவ குமாரா திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா? - நல்ல - மண

3. குடித்தன வீரம் , குணமுள்ள தாரம் ,
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல - மண

4. மன்றல் செய் தேவி , மணாளனுக்காவி
மந்திரம் அவர்குறை மேதாவி
மன்றியிப் பூவி லமிர்த சஞ்சீவி:
அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல - மண

Start Downloading Your Apps