இயேசுதானே அதிசய தெய்வம்

இயேசுதானே அதிசய தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்

சரணங்கள்

1. அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம்- இயேசு

2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் - இயேசு

3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு - இயேசு

4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் - இயேசு

Start Downloading Your Apps