இன்ப துன்ப நேரத்திலும் உன்

இன்ப துன்ப நேரத்திலும் உன்
அன்புள்ள இயேசுவைப் பார்

1. இன்பத்தினால் அகமகிழ்ந்து - கிலேசத்தினால் துக்கித்து
சிற்றின்பப் பேருலகில் - சிக்கிக் கொண்டு இருக்கும் போதும்- இன்ப

2. சோதனையில் பிடிபட்டு - இடுக்கணில் இருக்கும்போதும்
சாத்தான் உனை மேற்கொள்ளும் போதும், அக்கினியாஸ்திரம் எறியும்போதும் - இன்ப

3. தோழரால் பகைக்கப்பட்டு - மனக்கிலேசம் அடையும்போதும்
உலகம் உன்னை இகழ்ச்சி செய்து - தன்னிடத்தை விட்டோடும்போதும்- இன்ப

4. அவர் தாமே சோதிக்கப்பட்டு - பாடு நமக்காய்ப் பட்டதினால்
அவர் சோதிக்கப்படும் நமக்கு - உதவி செய்ய வல்லவராம்- இன்ப

5. வறுமையினால் யாசித்து - பாடு மிகப்படும் போதும்
சாத்தான் உன்னை பகடிபண்ணி - உன் விசுவாசத்தைக் குறைக்கும்போதும் - இன்ப

6. கடு நோயால் பெலன் குன்றி பெலவீனத்தால் தள்ளாடி
ஜீவன் உனக்குக் கசப்பாகி - சாவை நீ விரும்பும் போதும்- இன்ப

7. பகைஞரால் கல்லெறியுண்டு - மரண நேரம் கிட்டும்போதும்
பக்தன் ஸ்தேவானைப்போல் - தைரியமாய் உன் இயேசுவைப் பார் - இன்ப

8. நான் என் இயேசுவின் தரிசனத்தை நிமிஷந்தோறும் காண்கிறதால்
நான்தான் பயப்படாதிரு என்றவர் என்னைத் தேற்றுகிறார்- இன்ப

Start Downloading Your Apps