எனது கர்த்தரின்‌ ராஜரீக நாள்‌

எனது கர்த்தரின்‌ ராஜரீக நாள்‌
எப்போ வருகுமோ?
ஏங்கும்‌ என்‌ கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ?

மனிதசுதனின்‌ அடையாளம்‌ விண்ணில்‌ காணும்‌, என்றாரே,
வல்லமையோடு மகிமையாய்த்தோன்றி, வருவேன்‌ என்றாரே. -எனது

சரணங்கள்‌

1. தேவ தூதரின்‌ கடைசி எக்காளம்‌ தொனி முழங்கவே;
ஜெகத்தில்‌ ஏசுவைப்‌ பற்றி மரித்தோர்‌ உயிர்த்தெழும்பவே,
ஜீவனுள்ளோரும்‌ அவருடன்‌ மறு ரூபமாகவே;
ஜெகத்தில்‌ பக்தர்கள்‌ கர்த்தரிடத்துக்‌ கெழுந்துபோகவே -எனது

2. தூதர்‌ எக்காளத்தொனியில்‌ என்னிடம்‌ சேர்ப்பேன்‌ என்றாரே!
சோதனை காலந்தனில்‌ தப்பவுன்னைக்‌ காப்பேன்‌ என்றாரே;
பாதக மனுஜாதி வேதனை அடையும்‌ என்றாரே;
பாவ மனுஷன்‌ தோன்றி நாசமாய்ப்‌ போவான்‌ என்றாரே -எனது

3. ஜாதிகட்குக்‌ கொடியாய்‌ ஈசாயின்‌ வேரன்‌ றேறுவார்‌;
சகலரும்‌ அவர்‌ கொடியின்‌ கீழ்‌ வந்து பணிந்து சூழுவார்‌;
நீதியாய்த்‌ தானே மேசியா எங்கும்‌ ஆளுகை செய்வார்‌,
நித்தம்‌ பிரபுக்களும்‌ நியாயமாய்த்‌ துரைத்தனம்‌ செய்வார்‌.-எனது

4. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள்‌ ஓடுமே,
ஏழைகள்‌ மன மகிழ்ந்து கர்த்தரை ஏத்திப்‌ பாடுமே;
வருஷமாயிரம்‌ அளவும்‌ பூமியில்‌ பலன்கள்‌ நீடுமே;
வானராச்சிய சேனைகள்‌ யாவும்‌ வந்து கூடுமே. எனது

5. சஞ்சலங்களும்‌ தவிப்புகள்‌ யாவும்‌ ஓடிப்‌ போகுமே;
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும்‌ வந்து சார்ந்து பிடிக்குமே;
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின்‌ வாய்‌ துதிக்குமே;
நித்திய ஜீவனைப்‌ பெற என்றன்‌ மனம்‌ துடிக்குமே. - எனது

Start Downloading Your Apps