சாலேமின்‌ ராசா சங்கையின்‌ ராசா

சாலேமின்‌ ராசா, சங்கையின்‌ ராசா, ஸ்வாமி, வாருமேன்‌,
ஸ்வாமி, வாருமேன்‌,-இந்தத்‌
தாரணிமீதினில்‌ ஆளுகை செய்திடச்‌ சடுதி வாருமேன்‌. -சா

2. சீக்கிரம்‌ வருவோ
மென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே;
இந்தச்‌ சீயோனின்‌ மாதுகள்‌
தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? -சா

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக்‌
கண்பூத்துப்‌ போகுதே;-நீர்‌
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம்‌ நிறைவேறலாகுதே -சா

4. நங்கை எருசலேம்பட்டணம்‌
உம்மை நாடித்தேடுதே
இந்த நானிலத்திலுள்ள
ஜீவப்பிராணிகள்‌ தேடிவாடுதே. -சா

5. சாட்சியாகச்‌ சுபவிசேஷம்‌
தாரணிமேவுதே;-உந்தஞ்‌
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்‌ தாவிக்கூவுதே. -சா

- அருளானந்தம்‌

Start Downloading Your Apps