மங்கா சுபகன மங்களமே

1. மங்கா சுபகன மங்களமே - மனம்
நீங்கா திம்மணர் தாம் பெறவே ... நிறை
சிங்கா தனபதி நீ அருளே
மங்களம் மங்களம் மங்களமே

பல்லவி

ஓங்கா உனதருள் பொங்கா
உனதொளி தாங்கா சகலமும்
வாங்கா திருவொளி

2. கானாவூர்க் கலியாணக் குறைவை நீக்கி - நல்
சோனா ரசமது பொழிந்தவர் நீர் - இம்
மணமக்கள் இருவர் மேலுமே நீர்
உம்மாசீர்வாதம் இன்றருளும் - ஓங்கா

3. ஈசாக்கு ரெபேக்காள் போலிவர்கள் - நல்
ஈசனருள் வரம் பெற்று வாழ - நம்
ஈசாயின் கிளையை அண்டினோராய் உம்
நாம மகிமைக் கென்றுழைக்க - ஓங்கா

4. தந்திவர் சமதம் உமக்கென்றுமே - அதில்
உந்தனின் ஜெபத்தகம் பதித்தென்றுமே
தந்திர சோதனை ஜெயித்தென்றுமே
சந்ததம் சந்ததம் சந்ததமே- ஓங்கா

5. பாடகர் பாடலின் கவி பலிக்க - தூதர்
துத்திய கீதங்கள் நிதமுடிக்க - மண
மாப்பிள்ளை பெண்மேல் பதம் படிக்க
நித்திய நித்தியமே செழிக்க - ஓங்கா

6. மங்களம் சோபனம் உமக்கென்றுமே - எம்
மங்கள கீர்த்தனம் துதி உமக்கே - தூதர்
துத்திய ஸ்தோத்திரம் என்றென்றுமே
ஆவி பிதா சுதனானவர்க்கே - ஓங்கா

Start Downloading Your Apps