ஜீவியமே ஒரே ஜீவியமே

ஜீவியமே ஒரே ஜீவியமே
அண்ட சராசரம் அனைத்திலுமே
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே- ஜீவியமே

சரணங்கள்

1. பிறப்பதும் இறப்பதும் தெய்வ செயல்
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் - ஜீவியமே

2. நித்தம் நம்மைவிட்டு செல்வார் பாரீர்
அவர் பாரும் செல்லும் அவ்விடமும் பாரீர்
அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும்
நரகத்தின் தினசரி காட்சி கேளீர்
இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர்- ஜீவியமே

3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
என் ஜனம் அழியுதே என ஏங்கும் ஆண்டவர்
துக்கத்தை தணிக்கும் சீஷர் தேவை
முன் வருவோர் யார்க்கும் இதுவே வேளை - ஜீவியமே

4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
கதையைப் போல் மனிதரின் நாட்கள் செல்லும்
உலகத்துச் சேவை சாகையில் ஓயும்
உன்னுடன் மரித்த பின் வருவதேது
கிறிஸ்துவின் சேவையே நிலைத்து நிற்கும்- ஜீவியமே

5. அர்ப்பணம் தந்தையே கை அளித்தேன்
கல்வி செல்வம் சுகம் பொருள் அனைத்தும்
செல்லுவேன் சொல்லுவேன் யேசுவே வழி என
வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் - ஜீவியமே

Start Downloading Your Apps