உன்னதத்தின் ஆவியே

உன்னதத்தின் ஆவியே
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே

சரணங்கள்

1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே, சோர்ந்துபோகும் எங்களை
தாங்க வேண்டும் உந்தன் ஆவியால் - உன்னத

2. ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல் மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும், அன்புகொண்டு வாழவும்
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே - உன்னத

3. ஜெப தூபம் எழுப்ப வேண்டுமே
ஜெய தொனியும் முழங்க வேண்டுமே
இந்தியாவில் எங்குமே, சிலுவை கொடி பறக்கவே
கிரியை செய்யும் உந்தன் ஆவியால்- உன்னத

Start Downloading Your Apps