இந்த காலம் பொல்லாதது

இந்த காலம் பொல்லாதது - உன்னை
கர்த்தர் அழைக்கிறார் (2)
நீ வாழும் வாழ்க்கைதான்
அது வாடகை வீடு தான்

1. உன்னை இரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்று காத்து வருகிறார் - இந்த காலம்

2. வாலிப நாட்களில் உன் தேவனை தேடிவா
சாத்தான் களத்தில் போரிட
செயல் வீரராய் திகழவா - இந்த காலம்

3. பாவத்தின் சம்பளம் எரிநகரம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே - இந்த காலம்

4. காலமோ முடியுதே தேவராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார் - இந்த காலம்

5. அல்லேலூயா பாடியே பரலோகமே சேருவாய்
பரன் இயேசுவின் பாதத்தில்
நல்ல பங்கினை பெற்றிடுவாய்- இந்த காலம்

Start Downloading Your Apps