இன்பமிதே பேரின்பமிதே

இன்பமிதே பேரின்பமிதே
இயேசு நாமம் இன்பமிதே
இன்பமிதே நல் இன்பமிதே
இயேசு நாமமே

சரணங்கள்

1. பாவம் போக்க வந்த நாமம்
இயேசு நாமமே
வாதை போக்க வந்த நாமம்
இயேசுவின் நாமமே- இன்பமிதே

2. நேற்றும் இன்றும் மாறாத நாமம்
இயேசு நாமமே
தேனிலும் இனிய நாமம்
இயேசுவின் நாமமே- இன்பமிதே

3. ஜீவா பாதை காட்டும் நாமம்
இயேசு நாமமே
ஜீவன் பலன் தந்த நாமம்
இயேசுவின் நாமமே- இன்பமிதே

4. சாவு பயங்கள் நீக்கும் நாமம்
இயேசு நாமமே
சாபம் ரோகம் நீக்கும் நாமம்
இயேசுவின் நாமமே- இன்பமிதே

5. தேவ ராஜ்ஜியம் சேர்க்கும் நாமம்
இயேசு நாமமே
தேவ நீதி நிறைந்த நாமம்
இயேசுவின் நாமமே- இன்பமிதே

Start Downloading Your Apps