யேசுவே திருச்சபை ஆலயத்தின்‌

யேசுவே திருச்சபை ஆலயத்தின்‌
என்றும்‌ நிலைக்கும்‌ மூலைக்கல்‌.

பேசற்‌ கரிய மூலைக்ககல்‌ அவர்‌
பெரும்‌ மாளிகையைத்‌ தாங்கும்‌ கல்‌. - யேசுவே

சரணங்கள்‌

1. ஆகாதிதென்று வீடு கட்டுவோர்‌
அவமதித்திட்ட இந்த கல்‌;
வாகாய்‌ ஆலய மூலைக்‌ கமைந்து
வடிவாய்த்‌ தலைக்கல்லான கல்‌. - யேசுவே

2. ஆலயமெல்லாம்‌ இசைவாய்‌ இணைக்கும்‌
அதிசயமான அன்பின்‌ கல்‌;
ஞாலத்துப்‌ பல ஜாதிகள்‌ தமை
நட்புற ஒன்றாய்ச்‌ சேர்க்கும்‌ கல்‌. - யேசுவே

3. ஓப்பில்லா அரும்‌ மாட்சிமை யுறும்‌
உன்னத விலைபெற்ற கல்‌;
எப்போதும்‌ பரஞ்சோதியாய்‌ நீதி
இலங்கும்‌ சூரியனான கல்‌. - யேசுவே

4. காற்றுக்கும்‌ கன மழைக்கும்‌ அசையா
கடிய மாபலமான கல்‌;
மாற்றிக்‌ கலியை ஆற்றுத்‌ துயரைத்‌
தேற்றி சபையைக்‌ காக்குங்‌ கல்‌. - யேசுவே

5. என்றும்‌ கட்டுவோம்‌ இந்த ஆலயத்தை,
எழிலுறவே இக்‌ கல்லின்மேல்‌;
நன்றாய்‌ இக்கல்லில்‌ நம்பிக்கை வைப்போன்‌
நாணம்‌ அடையாள மெய்தானே. - யேசுவே

- அருள்திரு. வே. சந்தியாகு

Start Downloading Your Apps