தோத்திரம்‌ கிருபை கூர்‌ ஐயா

தோத்திரம்‌! க்ருபை கூர்‌, ஐயா!
விழி பார்‌, ஐயா; விழி பார்‌, ஐயா!

சரணங்கள்‌

1. பாத்திரம்‌ இலா எனை நேத்திரம்‌ என உச்சிதமாய்க்‌
காத்து வந்திடும்‌, எனது கர்த்தாதி கர்த்தனே! - தோத்திரம்‌

2. இந்த நாள்‌ அளவிலும்‌ வந்த துன்பம்‌ யாவுமே
என்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! - தோத்திரம்‌

3. மனதிலும்‌ வாக்கிலும்‌ மட்டில்லாத பாவி நான்‌;
எனது தீதகற்றி ஆளும்‌, ஏகாம்பர நாதனே! - தோத்திரம்‌

4. போதனே, நீதனே, புனித சத்ய வேதனே,
கீதனே, தாசர்‌ துதி கேளும்‌, யேசு நாதனே! - தோத்திரம்‌

- ஏ. அண்ணாவியார்‌

Start Downloading Your Apps