சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்

1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்,
பின்பு ஏக சபையாக
கூடுவோம் ஆனந்தமாக;
அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.

கூடுவோம்... கூடுவோம்
இயேசுவோடு வாழுவோம்;
கூடுவோம்... கூடுவோம்
அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.

2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
மிக்க ஞானத்தால் நடத்தி
மோசமின்றியும் காப்பாற்றி,
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.

3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
சிறகாலே மூடிக் காத்து
மன்னா தந்து போஷிப்பித்து,
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.

4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
துன்பம் துக்கம் நேரிட்டாலே
கையில் ஏந்தி அன்பினாலே,
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.

5. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
ஜெயக்கொடி பறந்திடும்,
சாவும் தோற்றுப் பறந்தோடும்;
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.

Start Downloading Your Apps