எக்காலும் இயேசுவே

எக்காலும் இயேசுவே சகாயராயிரும்
அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீங்கிடும்

எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும்
நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே!

1. எப்போதும் இயேசுவே இப்பாவியோடிரும்
தீயோனின் சோதனை ஓயாமல் விலக்கும்- எந்நாளும்

2. எக்காலும் இயேசுவே இக்கட்டு வாழ்விலும்
அன்பாகத் தங்குவீர் என் நீச நெஞ்சிலும் - எந்நாளும்

3. எப்போதும் இயேசுவே இப்பேதைக் கிரங்கும்
மெய்ஞானம் சத்தியம் செய் நன்றி போதியும் - எந்நாளும்

4. எக்காலும் இயேசுவே எக்கேடும் நீக்குமேன்
காருண்ய நாயகா நீர் என்னை ஆளுமேன் - எந்நாளும்

Start Downloading Your Apps