சோபனமாக சுப தினமே

சோபனமாக சுப தினமே
மாபெரும் ஆசிகள் மகிழந்தருள்வீர்
சுப ஜெய மங்களமே (3)- ஆமென்

அனுபல்லவி

சீர்பெற திருமணம் என்றும் வாழ்க
அருளோடும் புகழோடும் வாழ்ந்திடவே

சரணங்கள்

1. ஆனந்தமாக வாழ்ந்திடவே
ஆண்டவனருளால் அனுதினமே
அன்பு கொண்டுந்தன் பதந் தொழுதே
அல்லல்கள் நீங்கி அகமகிழ்ந்தே- சீர்பெற

2. மாநில மீதில் மனமுவந்தே
மங்கள வாழ்வு தனிற் சிறந்தே
பாலெனப் பொங்கிப் பல வளனும்
பாக்கியம் புகழும் பரவிடவே- சீர்பெற

3. சந்ததி பெருகித் தழைத்திடவே
சாஸ்தவமாக நிலைத்திடவே
ஆனந்தமாக அமைந்திடவே
ஆரருள் வாழ்க்கை அழகுறவே- சீர்பெற

4. மங்களமாகும் இத்தினம்போல்
மகிழ்வுடன் மாண்பாய் இருபேரும்
தங்கவண் செல்வ நாயகனின்
தாழ்வறு திவ்விய அடி நிழற்கீழ்- சீர்பெற

Start Downloading Your Apps