எத்தனை நாட்கள் செல்லும்

எத்தனை நாட்கள் செல்லும்
இயேசுவின் சுவிசேஷம்
அத்தனை நாட்டவரும் அறிய
எத்தனை நாட்கள் செல்லும்

சரணங்கள்

1. ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதே
தேடுவோர் யாவருக்கும் - என் பெலன் தாராளம் - எத்தனை

2. சாத்தானின் சக்திகளும் - பெருகிடும் நாட்களில்
தேவனின் பிள்ளைகளுக்குள் - ஒரு மனம் என்று வரும் - எத்தனை

3. தேவைகள் நிறைந்து நிற்க - வாய்ப்புகள் நழுவிச் செல்ல
தாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்? - எத்தனை

4. கோபங்கள் சீற்றங்களும் - பொறாமையும் பிரிவுகளும்
ஊழியர் என்று சொல்வார் - நடுவினில் நின்றகலும் - எத்தனை

5. உண்மையாம் கோதுமைகள் - மணியாக மண்ணடியில்
மறைந்திடும் நாள் வருமா - நாம் உடைபடும் நாள்வருமா - எத்தனை

Start Downloading Your Apps