கொல்கொதாவே கொலை மரமே

கொல்கொதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே- கொல்கதா

அனுபல்லவி

கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே - கொல்கதா

1. கந்தை அணிந்தார், நிந்தை சுமந்தார்
கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா- கொல்கதா

2. என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ - கொல்கதா

3. வானம் பூமி ஒன்றாய் இணைந்த
வல்ல தேவன் உமக்கே சரணம்
வாடி, வாடி, கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே- கொல்கதா

4. அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, என்றென்றும் - கொல்கதா

Start Downloading Your Apps