ஓய்வு நாள்‌ இது மனமே

ஓய்வுநாள்‌ இது, மனமே,-தேவனின்‌
உரையைத்‌ தியானஞ்‌ செய்‌ கவனமே.

நேய தந்தையர்‌ சேயர்க்‌ குதவிய
நெறி இச்‌ சுவிசேஷ வசனமே. ஓய்வு

சரணங்கள்‌

1. ஜீவ சுக புத்ர செல்வம்‌ தந்தவர்‌
சேவடி உனக்‌ கபயமே;
மேவி அவர்‌ கிருபாசனத்தின்‌ முன்‌
வேண்டிக்கொள்‌, இது சமயமே. ஓய்வு

2. ஆறு நாளுனக்‌ களித்தவர்‌, இளைப்‌
பாறி எழினில்‌ களித்தவர்‌;
கூறும்‌ பூரண ஆசீர்வாதத்தைக்‌
குறித்துணை இதற்‌ கழைக்கிறார்‌. -ஓய்வு

3. கர்த்தர்‌ ஆசனம்‌ குறுகிக்‌ கேள்‌ இன்று
காலை நண்‌ பகல்‌ மாலையும்‌;
சுத்தம்‌ நாடுவோர்‌ யாவரும்‌ வந்து
துதி செய்யும்‌ இத்‌ தேவாலயம்‌. ஓய்வு

Start Downloading Your Apps