உன்னதர் இயேசுவுக்கே உந்தன்

உன்னதர் இயேசுவுக்கே - உந்தன்
உள்ளத்தைத் தந்திடாயோ

சரணங்கள்

1. வருந்தும் பாவப் பாரமதை
வருந்தியே சுமக்கும் மானிடனே
வல்லவராம் இயேசுவண்டை
வந்தே சுகம் பெறுவாய்- உன்னதர்

2. வானில் விரைந்தே பறந்தாலும்
பூமியில் கடலினிலே அலைந்தாலும்
தன் ஜீவனைத் தந்தோருன்னை
அன்போடு காத்திடுவார்- உன்னதர்

3. பசும்புல் வெளியில் மேய்த்திடுவார்
பாதையில் வாதையில் காத்திடுவார்
தாகம் வரா ஜீவ தண்ணீர்
தந்துன்னைத் தேற்றிடுவார்- உன்னதர்

4. வழியும், ஜீவன், சத்தியமும்
விழிதனில் ஒளியும் அவர்தானே
அவரையே நீ நம்பி வந்தால்
ஆறுதல் கண்டடைவாய்- உன்னதர்

5. ஜீவ பலியாய் உன்னிதயம்
இயேசுவுக்கு நீ தந்து விட்டால்
மண்ணினிலே சந்தோஷமும்
விண்ணில் வாழ்வும் பெறுவாய் - உன்னதர்

Start Downloading Your Apps