இங்கே நொந்து கொள்கிறோம்

1.இங்கே நொந்து கொள்கிறோம்
கூடிப் பின்பு நீங்குவோம்
அங்கென்றும் நீங்கிடோம்.

ஆ, அதுவே இன்பம்
இன்பம், இன்பம், இன்பம்
ஆ, அதுவே இன்பம்
விண்ணில் என்றும் தங்குவோம்.

2.தேவதாசர் யாவரும்
தூய மோட்ச வாசரும்
அங்கொன்றாய்ப் பாடுவோம்.-ஆ, அது

3.பள்ளிக் கூடம் எங்கிலும்
உள்ள நல்ல பாலரும்
அங்கென்றும் தங்குவார்.-ஆ, அது

4.எங்கள் நல் உபாத்திமார்
நேசமுள்ள குருமார்
நீங்காமல் தங்குவார். -ஆ. அது

5.மா சந்தோஷங் கொள்ளுவோம்
யேசுவை நாம் காணுவோம்
சிம்மாசனத்தின் மேல். - ஆ. அது

6.அங்கெல்லாரும் கூடுவோம்
கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
ஓயாமல் பாடுவோம். -ஆ, அது

Start Downloading Your Apps