சத்தாய்‌ நிஷ்களமாய்‌ ஒருசாமிய

சத்தாய்(1)‌! நிஷ்களமாய்‌(2) ஒரு சாமியமும்‌(3)இலதாய்‌,
சித்தாய்(4) ஆனந்தமாய்த்‌ திகழ்கின்ற திரித்துவமே,
எத்தால்‌ நாயடியேன்‌ கடைத்தேறுவன்‌ என்பவந்தீர்ந்‌-து;
அத்தா(5), உன்னையல்லால்‌ எனக்கார்துணை, யாருறவே?

2. எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்(6)
கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங்‌ கை யடையாய்(7),
சும்மார ட்சணைசெய்‌(8), சொல்சுதந்தரம்‌ யாதுமிலேன்‌,
அம்மான்(9), உன்னையல்லால்‌ எனக்கார்துணை, யாருறவே?

3. திரைசேர்‌ வெம்பவமாம்‌ கடல்மூழ்கிய தீயரெமைக்‌
கரைசேர்த்‌ துய்க்க (10)வென்றே புணையாயினை(11)
கண்ணிலியான்‌(12),
பரசேன்‌ பற்றுகிலேன்‌; என்னைப்பற்றிய பற்றுவிடாய்‌,
அரசே, உன்னையல்லால்‌ எனக்கார்துணை, யாருறவே?

4. தாயே, தந்தை தமர்‌(13), குருசம்பத்து நட்பெவையும்‌
நீயே எம்பெருமான்‌, கதிவேறிலை நிண்ணயங்காண்‌(14);
'ஏயே' என்றிகழு உலகோடெனக்‌ கென்னுரிமை?
ஆயே(15), உன்னையல்லால்‌ எனக்கார்துணை, யாருறவே?

5. பித்தே'16) றிச்சுழலும்‌ ஜெகப்பேய்பிடித்‌ துப்பவத்தே(17)
செத்தேன்‌; உன்னருளால்‌ பிழைத்தேன்மறு ஜென்மமதாய்‌;
எத்தோ ஷங்களையும்‌ பொறுத்தென்றும்‌ இரங்குகவென்‌-று
அத்தா, உன்னையல்லால்‌ எனக்கார்துணை, யாருறவே?

6. துப்பார்‌(18)! சிந்தையிலேன்‌ மறைந்தீட்டிய(19) தொல்வினையும்‌
தப்பா தேவெளியா நடுநாளெனைத்‌(20) தாங்கிக்கொள்ள,
இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்‌
அப்பா உன்னையல்லால்‌ எனக்கார்‌ துணை, யாருறவே?
-௭.ஆ. கிருட்டிணன்‌


1 உண்மைப்பொருள்‌- 5 தந்தை 12 பார்வையற்றவன்‌
மெய்ப்பொருள் ‌6 பாதுகாத்தல்‌ 13 குற்றம்‌
2 ஓரிடமென்றில்லாமல்‌- 7 அடைக்கலம்‌ 14 உண்மை
உருவமற்றவராய்‌ 8 மீட்பு 15 மேய்ப்பன்‌
3 ஒப்புமை 9 தந்தை 16 மயக்கம்‌
4 அறிவு-வெளிப்பட்ட 10 தப்புவிக்க 17 பிறப்பு
மறைபொருள்‌ 11 தெப்பம்‌-படகானாய்‌
18 தூய 19 மறைந்துசெய்த-அந்தரங்க
20 நியாயத்தீர்ப்பு

Start Downloading Your Apps